Enable Javscript for better performance
அரியலூர் குறைதீர் கூட்டத்தில் ரூ.86.75 லட்சம் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் குறைதீர் கூட்டத்தில் ரூ.86.75 லட்சம் நலத் திட்ட உதவிகள்

    By அரியலூர்,  |   Published on : 16th June 2015 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 112 பயனாளிகளுக்கு ரூ. 86.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரியலூர் வட்டம், கண்டிராதித்தம், மேட்டுத்தெரு கிராமத்தைச் சேர்ந்த ஆதிராஜ் பாம்பு கடித்து இறந்ததையொட்டி, அவரது தாயார் சந்திராவுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 15 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

    புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், 61 மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி சுய உதவிக் குழுவினருக்கு மொத்தம் ரூ. 66.7 லட்சம் மதிப்பிலான நேரடி கடனுதவி, செல்போன் பழுது நீக்கும் பயிற்சி பெற்ற 28 பேருக்கு சான்றிதழ் மற்றும் ரூ. 1.40 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், மகளிர் திட்டம் சார்பில், ஊராட்சி அளவிலான 14 கூட்டமைப்புகளுக்கு தலா ரூ. 1 லட்சம் நேரடி கடனுதவி, 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் நேரடிக் கடனுதவி, முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 2 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் மகளின் திருமண நிதியுதவி, 2 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ஈமச்சடங்கு நிதியுதவி என மொத்தம் 112 பயனாளிகளுக்கு ரூ. 86.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், தனித் துணை ஆட்சியர் (சிறப்புத் திட்ட செயலாக்கம்) தமிழ்ராஜன், உதவித் திட்ட அலுவலர் (புதுவாழ்வு) ஜீவியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai