Enable Javscript for better performance
குறைந்த வட்டியில் கடன் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குறைந்த வட்டியில் கடன் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By அரியலூர்  |   Published on : 16th June 2015 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூரில் வியாபாரிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் மாவட்ட ஏஐடியுசி தெரு வியாபாரத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் சு. சாந்தநாயகி தலைமை வகித்தார்.

    கோரிக்கைகள்: தெரு வியாபாரிகள் சட்டம் 2014-ன்படி, தாமதமின்றி மாநில விதிகளை உருவாக்க வேண்டும், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், இந்த சட்டப்படி நகர வணிகக் குழு அமைக்கவும், அதில் 40% இடங்களை தெரு வியாபாரிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    வியாபாரிகளுக்கு புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டை வழங்க வேண்டும், குறைந்த வட்டி விகிதத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கி, வட்டி கொடுமையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், சங்கத் துணை நிர்வாகிகள் சா. சரவணன், சா. ராசாத்தி, ப. வணங்காமுடி, க. கார்த்திகேயன், பன்னீர்செல்வம், தமிழரசி, அமராவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏஐடியுசி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி. தண்டபாணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் இரா. உலகநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai