Enable Javscript for better performance
நூறு நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    நூறு நாள் வேலைத்திட்ட ஊதியம் வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

    By அரியலூர்,  |   Published on : 16th June 2015 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், வாணதிரையன்பட்டினம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் செய்த வேலைக்கு ஊதியம் வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    இந்த கிராமத்தின் 3-வது வார்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜிடம் அளித்த மனு:

    எங்கள் ஊராட்சியில் 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை வேலை செய்தோம். ஆனால், எங்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை.

    மீண்டும் ஜூன் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை வேலை செய்தோம். ஆனால், மே மாதம் வரை வேலை செய்த 3-வது வார்டில் ஒரு பகுதியும், 4-வது வார்டில் ஒரு பகுதிக்கும் ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது.

    தொடர்ந்து வேலை செய்த எங்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai