Enable Javscript for better performance
வங்குடி ஏரியை தூர்வார வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    வங்குடி கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வார வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒன்றியம், வங்குடி ஊராட்சியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் வட்டத்தேரி என்ற பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்தும் குளம் உள்ளது. இக்குளத்தில் நீண்ட நாட்களாக தாமரை செடிகள் மற்றும் பாசிகள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி உள்ளது. கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் வட்டத்தேரியிலுள்ள நீரை வெளியேற்றி தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai