Enable Javscript for better performance
518 பேருக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட பணி ஆணை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மருவத்தூர் ஊராட்சியில் 516 பேருக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கான ஆணையை நிர்வாகச் செயற்பொறியாளர் குமார் அண்மையில் வழங்கினார்.

    இதற்கான விழா ஊராட்சித் தலைவர் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நிர்வாகச் செயற்பொறியாளர் குமார் 518 பயனாளிகளுக்கு பணி உத்தரவை வழங்கிப் பேசுகையில், இந்தத் திட்டத்தின மூலம் பயனாளிகளுக்கு நேரடியாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பயனாளிகள் தங்களது வீடுகளில் விருப்பம் போல தனிநபர் கழிப்பறைகளை கட்டிக்கொள்ளலாம். இன்று பணி ஆணை வாங்கிய 518 பேரும், 2 மாதங்களுக்குள் கழிப்பறைகளை கட்டி முடித்தால், இந்த கிராமத்துக்குத் தேவையான குடிநீர் மற்றும் சாலை வசதிகள் சிறப்பு நிதியிலிருந்து செய்து தரப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் பாபு, ஆணையர் பிரபாகர், ஒன்றியப் பொறியாளர் சண்முகசுந்தரம், வட்டார ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், புதுவாழ்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai