Enable Javscript for better performance
அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இக்கண்காட்சியில் தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம், "தாலிக்கு தங்கம்' வழங்கும் திட்டம், மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பாக  இ-பொதுசேவை மையங்களின் செயல்பாடு பற்றிய புகைப்படங்கள், விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் கால்நடைகளுக்கு  குறைந்த விலையில் தீவனப்புல் விலையில்லா மிக்சி, கிரைண்டர், முதியோர் உதவித்தொகை மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், மடிக்கணினி, சைக்கிள், சீருடைகள் வழங்கும் திட்டம் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

    இக்கண்காட்சியில் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (விளம்பரம்) க. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai