Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம்

    By dn  |   Published on : 17th June 2015 01:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் பொதுசேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார் ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம், அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை ஆகிய மூன்று வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது இ-சேவை மையங்கள் அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று வருவாய் சான்று,சாதிச் சான்று, பிறப்பு, இறப்புச் சான்று உள்ளிட்ட சான்றுகளைப் பெறலாம்.

       மேலும்,ஆதார் அட்டை பெற விண்ணப்பித்துள்ளவர்கள் (கருவிழி மற்றும் கைரேகைகளைப் பதிவு செய்து ஒப்புகைச்சீட்டு பெற்றவர்கள்) பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று ரூ. 40 செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

    ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்கள் ரூ. 30 செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai