Enable Javscript for better performance
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகை கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே பூட்டியிருந்த வீட்டுக் கதவை உடைத்து 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

     அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் செல்வபுரத்தில் வசிப்பவர் சின்னப்பன் மகன் சிவசங்கரன் (41). ஆசிரியர். இந்நிலையில்,திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தாராம். இவரது அண்டை வீட்டில் வசிப்பவருமான சாமிக்கண்ணு மனைவி காமாட்சி (75)யும் பெரம்பலூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று விட்டாராம். இதையறிந்த மர்மநபர்கள், திங்கள்கிழமை இரவு பூட்டியிருந்த இரு வீடுகளிலும் தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர். 

      சிவசங்கரன் வீட்டு அலமாரியில் இருந்த 7 பவுன் நகை மற்றும் 500 ரூபாய் ரொக்கம் மற்றும் காமாட்சி வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் கிடைக்காததால், ஏமாற்றத்துடனன் பொருட்களை கலைத்துப் போட்டு சென்று விட்டனர். இதுகுறித்து, அவர்களிருவரும் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai