Enable Javscript for better performance
அரியலூரில் அண்ணாசிலை-தேரடி வரை பட்டாசு வெடிக்க தடை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் அண்ணாசிலை-தேரடி வரை பட்டாசு வெடிக்க தடை

    By அரியலூர்,  |   Published on : 18th June 2015 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் தேரடி முதல் அண்ணாசிலை வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் திருமண விழா, துக்க நிகழ்ச்சி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிக சப்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் பள்ளிகள், மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பட்டாசுகளை வெடிப்பதால், மாணவ, மாணவிகள் மற்றும் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.

    இதுதொடர்பாக சார் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரிக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து பட்டாசு வெடிக்க தடை விதித்து சார் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில், அரியலூர் தேரடியில் இருந்து அண்ணாசிலை வரை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, இறுதி ஊர்வலம், திருமண விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் போன்ற எதற்காகவும் பட்டாசு போன்ற எந்த ஒரு வெடிப்பொருளையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    மீறினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai