Enable Javscript for better performance
அரியலூரில் அனுமதியின்றி மதுவிற்ற 12 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் அனுமதியின்றி மது விற்றதாக பெண் உள்ளிட்ட 12 பேரை மதுவிலக்குப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மதுவிலக்கு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கோவிந்தப்புத்தூர் மகேஸ்வரி (37), காசான்கோட்டை ரவி (43), சிறுகடம்பூர் முருகானந்தம் (52), தூத்தூர் காசிராஜன் (41), செட்டித்திருக்கோணம் பன்னீர்செல்வம் (40), விளந்தைஜெயராமன் (63) ஆகியோர் அனுமதியின்றி மது விற்ற போது அவர்களை மதுவிலக்கு போலீஸார் கைது செய்தனர்.

    இதேபோல, அகரம் வேல்முருகன் (28), சாத்தம்பாடி முருகன் (34), ஆயிபாளையம் வேல்முருகன் (25), உடையார்பாளையம் சுப்பிரமணியன் (53), இரும்புலிக்குறிச்சி அழகுதுரை (45), கீழக்குடியிருப்பு குப்புசாமி (52) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்றது தொடர்பாக அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai