Enable Javscript for better performance
அரியலூர்: ஹெல்மெட் அணியாமல் சென்ற42 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர்: ஹெல்மெட் அணியாமல் சென்ற42 பேர் மீது வழக்கு

    By அரியலூர்  |   Published on : 18th June 2015 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற 42 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தினர், நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மாலை முதல் இரவு முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 17 பேர், இருசக்கர வாகனத்தில் 3 பேரை ஏற்றிச் சென்றதாக 7 பேர், அதிக வேகமாக வாகனம் ஓட்டியதாக 8 பேர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக 42 பேர், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 12 பேர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 4 பேர், மற்ற விதிமீறலில் 40 பேர் என அரியலூர் மாவட்டத்தில் 133 பேர் மீது போலீஸார் ஒரே நாளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai