Enable Javscript for better performance
கீழப்பழூவூர் பத்திரப் பதிவு அலுவலகத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கீழப்பழூவூர் பத்திரப் பதிவு அலுவலகத்தை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By அரியலூர்  |   Published on : 18th June 2015 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழப்பழூவூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கத்தினர் கீழப்பழூவூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அகில இந்திய விவசாய சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருமானூர் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வரப்பிரசாதம் தலைமை வகித்தார். இதில், கீழப்பழூவூர் பேருந்து நிலையம் அருகே குட்டைபோல காட்சியளிக்கும் பள்ளத்தை சரிசெய்ய வேண்டும், கீழப்பழூவூர் - தஞ்சை சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், கீழப்பழூவூரில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தை தாமதிக்காமல் உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. விவசாய சங்க மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் துரைசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மணியன், மாவட்டத் தலைவர் நாகரத்தினம், மாவட்ட துணைத் தலைவர் பிச்சைப்பிள்ளை உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சங்கப் பிரதிநிதிகள் ஜெயபால், வைத்திலிங்கம், ஆரோக்கியராஜ், சீரங்கன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai