Enable Javscript for better performance
விதிமுறைகளை பின்பற்றாத 41 வாகனங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத 9 பள்ளி வேன்கள் உள்பட 41 வாகனங்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சிமென்ட் ஆலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளுக்கு சிமென்ட் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளான சுண்ணாம்புக்கற்களை ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகளும், உற்பத்தி செய்யப்பட்ட சிமென்டை ஏற்றிச் செல்லும் லாரிகளும் அதிக அளவில் பாரம் ஏற்றிச் செல்வதோடு, அளவுக்கு அதிகமான வேகத்தில் இயக்கப்படுதால் அதிக அளவில் விபத்து ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் உத்தரவின் பேரில், அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி மற்றும் சாலை ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பள்ளி வாகன அனுமதி பெறாமல் இயக்கிய 9 பள்ளி வேன்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அரியலூர் புறவழிச் சாலையில், செந்துறை பிரிவு பாதையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட

    15 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட 24 வாகனங்களும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன. அரியலூர் சார் ஆட்சியர் (பொ) லீலாவதி, அரியலூர் வட்டாட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் தலைமையில், வி.கைகாட்டி பகுதி ரெட்டிப்பாளையத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அதிக பாரம்

    ஏற்றிச்சென்ற 17 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai