Enable Javscript for better performance
அரியலூரில் ஓட்டுநர் தேர்வுதளம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் ஓட்டுநர் தேர்வுதளம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறப்பு

    By அரியலூர்  |   Published on : 19th June 2015 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் தேர்வு தளத்தை காணொலி காட்சி மூலம் சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

    இதைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தமிழக முதல்வரால் ரூ. 67 லட்சம் மதிப்பில் திறந்து வைக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ச. அழகிரிசாமி, மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆய்வாளர் என். சரவணபவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai