Enable Javscript for better performance
செந்துறையில் குப்பை அள்ளும் வாகனம் வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    செந்துறையில் குப்பை அள்ளும் வாகனம் வழங்க வலியுறுத்தல்

    By அரியலூர்  |   Published on : 19th June 2015 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செந்துறையில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வசதியாக குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ள 30 ஊராட்சிகளில் முதல்நிலை ஊராட்சியாக செந்துறை உள்ளது. இங்கு சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கே தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வங்கிகள் என பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதனால் 30 ஊராட்சிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் செந்துறைக்கு வந்து செல்கின்றனர். அதிக அளவில் மக்கள் வந்து செல்வதால் நாள்தோறும் அதிக அளவில் குப்பைகளும் சேருகிறது.

    இதனை அகற்றும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு போதிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை. பணியாளர்கள் குப்பை அள்ளும் வாகனம் இல்லாததால் தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளை தள்ளிக்கொண்டே சென்று குப்பைகளை அப்புறப்படுத்துகின்றனர். இதனால் காலவிரயம் ஆவதால் காலை நேரத்தில் அனைத்து வீதிகளிலும் உள்ள குப்பைகளை அகற்ற முடிவதில்லை. மேலும் பிளாஸ்டிக் தொட்டியை இழுத்துச் செல்வதால் தொட்டியும் சேதமடைகிறது. மேலும் குப்பைத் தொட்டிகள் விரைவில் நிரம்பி விடுவதால் பொதுமக்கள் குப்பைகளை ஆங்காங்கே உள்ள ஓடைகளில் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் செந்துறை நகரமே குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

    எனவே மாவட்ட ஆட்சியர் சிறப்புக் கவனம் செலுத்தி செந்துறைக்கு தனியாக குப்பை அள்ளும் வாகனம் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai