Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்: 3 பேர் காயம்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 19th June 2015 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு குழந்தை உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

    ஜயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (35). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை தனது மனைவி ரோஜா (28) மற்றும் மகன் சஞ்சீவி (3) ஆகியோருடன் ஜயங்கொண்டம் -சிதம்பரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சின்னவளையம் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன், ரோஜா, சஞ்சீவி ஆகிய மூவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் செல்வம் வழக்குப் பதிந்து ஜயங்கொண்டம் சாமிக்கண்ணு மகன் ஆண்ட்ரு(48) என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai