Enable Javscript for better performance
மழைநேரத்தில் மின்கம்பத்தில் கை வைத்த பெண் மின்சாரம் பாய்ந்து சாவு- Dinamani

சுடச்சுட

    

    மழைநேரத்தில் மின்கம்பத்தில் கை வைத்த பெண் மின்சாரம் பாய்ந்து சாவு

    By அரியலூர்,  |   Published on : 19th June 2015 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செந்துறை அருகே மின்சாரம் பாய்ந்து இளம்பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், செந்துறை அண்ணாநகரைச் சேர்ந்தவர் குணசேகரன். பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மகள் சுகுணா (19) பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், செந்துறை, ஜயங்கொண்டம், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில் சுகுணா தனது தந்தையின் கடையில் இருந்து வெளியே வந்தார், அவர் கடையின் வாசலில் இருந்த மின்கம்பத்தைப் பிடித்த போது அதில் இருந்த எர்த் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.

    இதைத் தொடர்ந்து சுகுணாவின் உறவினர்களும், பொதுமக்களும் இந்த விபத்துக்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் எனக் கூறி அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செந்துறை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai