Enable Javscript for better performance
விஷம் குடித்து விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே உள்ள சோழமாதேவி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி மகன் தேவேந்திரன்(40). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தேவேந்திரன் கடந்த மே 15ஆம் தேதி வயலுக்கு அடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பூச்சிமருந்தைக் குடித்தார். இதையடுத்து அவர் ஜயங்கொண்டம் தனியார் மருத்துவமனையிலும், மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தேவேந்திரன் வியாழக்கிழமை இறந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai