Enable Javscript for better performance
அரியலூரில் நாளை யோகா செய்முறை பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 21) யோகா செய்முறை மற்றும் ஆசன பயிற்சிகள் நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    சர்வதேச யோகா தினத்தினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரியலூர் பிரிவின் சார்பில், அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூன் 21 ஆம் தேதி காலை 7 மணி முதல் 7.30 மணி வரை யோகா செய்முறை மற்றும் ஆசன பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதில், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், யோகா கல்வி நிறுவனங்கள், யோகா சங்கங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், காவல்துறையைச் சார்ந்தவர்கள், என்.சி.சி. என்.எஸ்.எஸ்., நேரு யுவகேந்திராவைச் சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டு சர்வதேச யோகா தினத்தினை சிறப்பிக்க வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai