Enable Javscript for better performance
கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    By அரியலூர்  |   Published on : 20th June 2015 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், செம்பியக்குடியில் இயங்கி வரும் செம்பியன்மாதேவி அறக்கட்டளை சார்பில் திருமானூர் ஒன்றிய அளவில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற 14 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா செம்பியக்குடியில் அண்மையில் நடைபெற்றது.

    விழாவுக்கு அறக்கட்டளையின் கெளரவத் தலைவர் புலவர் ம. திருநாவுக்கரசு தலைமை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பள்ளி அளவில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற 75 மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், ரொக்கப் பரிசும் வழங்கினார்.

    மேலும், அண்ணா பல்கலைக்கழக அளவில் இயந்திரவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி அபிராமி, 1330 திருக்குறளையும் ஒப்பித்த மாணவ, மாணவிகள் 3 பேருக்கும், செம்பியன்மாதேவி என்ற பட்டத்தையும், ரொக்கப் பரிசையும் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர், அரியலூர் தொகுதி மக்கள் சார்பில் செம்பியன்மாதேவி சிலை செய்வதற்கு ரூ. 50 ஆயிரத்தையும் அறக்கட்டளை நிர்வாகிகளிடம் வழங்கினார்.

    இதில், நாகை பேராசிரியர் முனைவர் எழில் எழுதிய செம்பியன்மாதேவி புத்தகம் வெளியிடப்பட்டது.

    அறக்கட்டளை தலைவர் சைவராஜ், சிவகுமார், ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் பழனிச்சாமி, அறங்காவலர் குழுத் தலைவர் சுந்தர்ராஜ், உறுப்பினர் திருநாவுக்கரசு, ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியை தலைமை ஆசிரியை அல்லி தொகுத்து வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai