Enable Javscript for better performance
\\\"விவசாயிகளுக்கு ரூ. 99 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "விவசாயிகளுக்கு ரூ. 99 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு'

    By அரியலூர்,  |   Published on : 20th June 2015 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 2015-16 ஆம் ஆண்டுக்கு ரூ. 99 கோடி பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கூட்டுறவுத்துறை சார்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயலாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:

    அரியலூர் மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கு அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 99 கடன் பயிர்க் கடன் வழங்கிட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் இதுவரை ரூ. 9 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாதத்துக்குள் பயிர்க் கடன்களை விவசாயிகளுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட அலுவலர்கள், சங்கங்களின் செயலாளர்கள் பணி மேற்கொள்ள வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான அளவுக்கு யூரியா உரம் இருப்பு வைத்திருக்க வேண்டும். அரசின் சிறப்புத் திட்டங்களின் அனைத்து சான்றிதழ்கள், பணிகள் உ-எர்ஸ்ங்ழ்ய்ஹய்ஸ்ரீங் கணினி வாயிலாக பொதுமக்களுக்கு கிடைத்திடவும் அலுவலர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றார்.

    இதில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் பாபு, துணைப் பதிவாளர் சந்திரசேகரன், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் செல்வராஜ் மற்றும் சங்கங்களின் செயலாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai