Enable Javscript for better performance
1032 வழக்குகளுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில், ரூ. 85.64 லட்சம் மதிப்பிலான 1032 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

    உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம் பகுதிகளை உள்ளடக்கிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளிலும் மற்றும் பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் வாராக் கடன்களை வசூல் செய்வதற்கான தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

    முகாமுக்கு, அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. கிருஷ்ணவல்லி தலைமை வகித்தார். இதில் மூன்று அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, அரியலூர் சார்பு நீதிபதி ஜி. நாகராஜன், அரியலூர் கூடுதல் மாவட்ட உரிமையியில் நீதிபதி சீனிவாசன், ஜயங்கொண்டத்தில் நடைபெற்ற அமர்வில் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், நீதித்துறை நடுவர் முத்துமுருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த அமர்வுகளில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 41 வழக்குகளுக்கு உடனடியாக ரூ. 28,68,500 தீர்வு வழங்கப்பட்டது. மூன்று சிவில் வழக்குகளில் ரூ. 2,55,00-க்கு தீர்வு காணப்பட்டது. மேலும், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் சம்பந்தமான வழக்குகளில் 988 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பாரத ஸ்டேட் வங்கியின் 44 வழக்குகளுக்கு ரூ. 54,41,300 மதிப்பில் என மொத்தம் ரூ. 85 லட்சத்து 64 ஆயிரத்து 800 மதிப்பிலான 1032 வழக்குகளுக்கு இம்முகாமில் தீர்வு காணப்பட்டது.

    மக்கள் நீதிமன்ற முகாம் ஏற்பாடுகளை மாவட்ட நீதிமன்ற மேலாளர் ஜஸ்டஸ், அரியலூர் வட்டச் சட்டப் பணிகள் குழு முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    இதில் பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளர்கள் ரவிச்சந்திரன், குமார், மற்றும் கள அலுவலர்கள் அருள்மொழி, மகேந்திரன், வெங்கடேசன் மற்றும் அழகுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai