Enable Javscript for better performance
அரியலூர் அருகே மரத்தின் மீது கார் மோதி  3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே சனிக்கிழமை மாலை மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.

    கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (45).  இவர், நாகை மாவட்டம், மயிலாடுதுறை கிளை, கனரா வங்கியின் துணை மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (40). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அபிஷேக் (17) பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இந்நிலையில், மனோகரன்  தனது குடும்பத்தினருடன் காரில்  திருச்சி சென்று அங்குள்ள கோயில்களில் தரிசனம் செய்து விட்டு சனிக்கிழமை மாலை மீண்டும் சிதம்பரம் திரும்பிக் கொண்டிருந்தனர். மனோகரன் காரை ஓட்டிவந்துள்ளார். 

    இந்நிலையில், அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகேயுள்ள மயிலாண்டகோட்டை என்ற இடத்தில், கட்டுபாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த பனைமரத்தின் மீது மோதியது. இதில், காயமடைந்த மனோகரன் உள்ளிட்ட 3 பேரும் தனியார் சிமெண்ட் ஆலை ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர்,மேல்

    சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து வி.கைகாட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai