Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் இ-பொதுசேவை மையங்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் இ-பொதுசேவை மையங்கள் மூலம் சான்றிதழ்கள் வழங்கல்

    By dn  |   Published on : 21st June 2015 11:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களின் இ-பொது சேவை மையம் மூலம் பொதுமக்களுக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    இதுதொடர்பாக, அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    வருவாய்த்துறையினரால் வழங்கப்படும் வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் சான்று ஆகியவற்றிற்கு ரூ. 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும், சமுக நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வரும் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நித உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் ஆகிய திட்டங்களுக்கு ரூ. 100 செலுத்தி இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகிறது என அந்தச்

    செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai