Enable Javscript for better performance
அரியலூர் மாவட்ட நரிக்குறவர்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் :ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட நரிக்குறவர்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் :ஆட்சியர்

    By dn  |   Published on : 21st June 2015 11:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையினர் மூலம் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நரிக்குறவர் நல வாரியத்தின் மூலம் நரிக்குறவர் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு விபத்து ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சமும்,  ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ. 10

    ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரையிலும், இயற்கை மரணம் ஏற்பட்டால் ரூ. 15 ஆயிரமும், ஈமச்சடங்கு செலவினத்துக்கு ரூ. 2 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

     மேலும், 1-ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு ரூ. 500மும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ. 1000மும் கல்விஉதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

     குறிப்பாக, 10 ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ. 1,000மும் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து, 11 ஆம் வகுப்பு கல்வி பயில்வோருக்கு ரூ. 1000மும், 12 ஆம் வகுப்பில் ரூ. 1,500மும், பட்டப்படிப்பு பயில்வோருக்கு ரூ. 1,750ம் வழங்கப்படுகின்றன.

      இதுதவிர, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும் விபரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai