Enable Javscript for better performance
\\\"மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை வாகனம்\\\' - Dinamani

சுடச்சுட

    

    "மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நடமாடும் சிகிச்சை வாகனம்'

    By dn  |   Published on : 21st June 2015 11:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனத்தை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வழங்கினார்.

    இதுகுறித்து, சனிக்கிழமை செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது: மாவட்ட தலைநகரங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆரம்ப காலப்

    பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதில், பயன்பெறும் குழந்தைகளுக்கும், அவர்களின் துணையாளர்களுக்கும் போக்குவரத்துப் பயண சலுகை வழங்கப்பட்டாலும், அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெறுவதில் சிக்கல் உள்ளது.

    எனவே, மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு என நடமாடும் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்த வாகனங்களின் மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அலுவலகத்தில் பணியாற்றும் முடநீக்கு வல்லுநர் மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்துக்கு சென்று உரிய சிகிச்சை அளிப்பர்.

    இயன்முறை சிகிச்சை கருவிகளுடன் செயல்திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, ஆரம்ப நிலையில் குறைகளைக் கண்டறிதல், பயிற்சி அளித்தல், விளையாட்டு முறையில் சிகிச்சை அளித்தல் போன்ற அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளும் வகையில் சிறப்பு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், முடநீக்கு வல்லுநர் சீனிவாசன், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் கருணாகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai