Enable Javscript for better performance
வி.கைகாட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்க பூமிபூஜை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் வி. கைகாட்டி 4 வழிப்பாதையில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் சாலை விபத்துகளும் நேரிட்ட வண்ணம் உள்ளது.

    இதனால் வி. கைகாட்டி சந்திப்பில் புறக்காவல் நிலையம் அமைக்க மாவட்டக் காவல் துறை மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும், இந்த புறக்காவல் நிலையம்  அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் மூலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.  நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியா வுல் ஹக், அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆலையின் தலைவர் வெ. கணேசன், ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் க. ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai