Enable Javscript for better performance
வெங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    வெங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

    By dn  |   Published on : 21st June 2015 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள வெங்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் லூர்து பால்ராஜ் விழாவுக்கு தலைமை வகித்தார். பள்ளியில் முதலிடம் பெற்ற சதீஷ், 2-ஆம் இடம் பெற்ற ஆகாஷ், 3-ஆம் இடம் பெற்ற வேல்முருகன் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற 11 மாணவ, மாணவிகளுக்கும் நினைவுப் பரிசுகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் அண்ணாதுரை, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai