Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் யோகா தின விழா - Dinamani

சுடச்சுட

    

    ஐ.நா சபை ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்ததை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் காலை தொடங்கிய யோகாசனப்பயிற்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ,மாணவிகள், மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட விளையாட்டு மைய யோகா பயிற்றுநர் டாக்டர் தமிழ்ச்செல்வன், சூரிய நமஸ்காரம்,உட்கட்டாசனா,புஜங்காசனா,தனூர்ஆசனா மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட 10 வகையான பயிற்சிகளை செயல் விளக்கம் மூலம் செய்துகாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுநாதன், யோக சங்க செயலாளர் அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 560 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவில், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    செந்துறையில்: பா.ஜ.க சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட உலக யோகா தின நிகழ்ச்சிக்கு செந்துறை ஒன்றிய பாஜக பொதுச்செயலாளர் த. வீரமணி தலைமை வகித்தார். இதில், ஈஷா யோகா அமைப்பின் மூலம் காணொலிக்காட்சி மூலம் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai