Enable Javscript for better performance
ஏழை மகளிருக்கான வாழ்வாதாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏழை மகளிருக்கான வாழ்வாதாரம் குறித்த ஆலோசனைக் கூட்டம்

    By அரியலூர்,  |   Published on : 22nd June 2015 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் ஏழை மகளிர்க்கான "சிறப்பு வாழ்வாதாரத் திட்டம்' குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

    தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் இதுகுறித்து பேசியது:

    கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மகளிரைக் குடும்பத் தலைவராகக் கொண்ட குடும்பத்தில் உள்ள ஆண் அல்லது பெண் உறுப்பினர்களே இச்சிறப்பு வாழ்வாதார திட்டத்தின் கீழ் பயனாளியாக தகுதியுடையவர் ஆவர்.

    மேலும், இவர்கள் 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருத்தல் வேண்டும்.

    மேலும் இவர்களுக்கு,வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்புப் பயிற்சி, சுய-தொழில் முனைவோருக்கான பயிற்சியுடன் தனி நபர் அல்லது கூட்டாக தொழில் புரிய வட்டி மான்யத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என்றார் அவர்.

    இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் எஸ். சாமுவேல் இன்பதுரை, மாவட்ட தொழில் மைய அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், புதுவாழ்வுத் திட்ட உதவி மேலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai