Enable Javscript for better performance
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: காதலன் மீது வழக்கு பதிவு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: காதலன் மீது வழக்கு பதிவு

    By ஜயங்கொண்டம்  |   Published on : 22nd June 2015 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே கல்லூரி மாணவியைக் காதலித்துவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள

    மனகொல்லை கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ் மகள் லிவ்யா (19). இவர், வரதராஜன்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.

    இவரும், வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பவுன் மகன் கபிரியேல் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.

    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கபிரியேல் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறினாராம்.

    இதனால், மனமுடைந்த லிவ்யா சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இந்த முடிவுக்கு கபிரியேல் தான் காரணம் எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து, அவரது சகோதரர் ஜஸ்டின் ராஜ் அளித்த புகாரின் பேரில், ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai