Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் சர்வதேச யோகா தினம்- Dinamani

சுடச்சுட

    

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் மற்றும் மீன் சுருட்டியில் யோகாசனப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இப்பயிற்சிக்கு அரியலூர் மாவட்ட பொதுச் செயலாளர்

    கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்டத் தலைவர் பாலமுருகன், ஆர்.எஸ்.எஸ் ஞானகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பயிற்சியில் ஈஷா யோகா மைய பயிற்றுநர்கள் ராஜா செளந்தர்ராஜன், குமாரசாமி ஆகியோர் பங்கேற்று யோகாசனப் பயிற்சிகள் அளித்ததுடன், அவற்றின் நன்மைகள், அவசியம் குறித்துப் பேசினர்.

    இதில், பா.ஜ.க. நிர்வாகிகள் கருணாநிதி, ரமேஷ், சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீன்சுருட்டி ஜெயின் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற யோகாசனப் பயிற்சிக்கு ஒன்றியத் தலைவர் ஜம்புலிங்கம் தலைமை வகித்தார்.

    ஒன்றியச் செயலர் சிவானந்தம், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். யோகா பயிற்றுநர் தெய்வா பயிற்சியளித்தார். இதில், ஒன்றியப் பொருளாளர் ரவி,இளைஞரணித் தலைவர் முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai