Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே வெவ்வேறு விபத்துகளில் இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே வெவ்வேறு விபத்துகளில் இருவர் சாவு

    By ஜயங்கொண்டம்  |   Published on : 22nd June 2015 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.

    கார் மோதி விவசாயக் கூலி சாவு: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்த வைத்திலிங்கம் மகன் ராமசாமி (55). விவசாயக் கூலி. இந்நிலையில், சனிக்கிழமை இரவு, ஜயங்கொண்டம் - சிதம்பரம் சாலையில் உள்ள சின்னவளையம் வாள்பட்டரை அருகே நடந்து சென்ற போது, பின்னால் வந்த கார் மோதியது. இதில், ராமசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில்,

    ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    லாரி மோதி முதியவர் சாவு: அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள அணைகுடம் கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் கங்காசலம் (65). இவர், ஞாயிற்றுக்கிழமை காலை ஜயங்கொண்டம் - தா.பழூர் சாலையில் நடந்து சென்ற போது, எதிரே வந்த லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் தா.பழூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    .

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai