Enable Javscript for better performance
தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு ரூ.1.89 கோடி நிதி ஒதுக்கீடு- Dinamani

சுடச்சுட

    

    தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு ரூ.1.89 கோடி நிதி ஒதுக்கீடு

    By அரியலூர்  |   Published on : 22nd June 2015 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடிக்கு ரூ. 1 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை சார்பில் வீரிய ரக காய்கறிகள், மா, கொய்யா, மல்லிகை, மிளகாய், பசுமை குடில் அமைத்தல், தேன் பெட்டி, தேன் பிழியும் உபகரணம், மினி டிராக்டர் (20ஏட), பவர் டில்லர், உற்பத்தி இல்லா பருவங்களில் முருங்கை சாகுபடி உள்ளிட்டவைகளை மேற்கொள்ள ரூ.1 கோடியே 89 லட்சத்து 69 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் கணினி சிட்டா, குடும்ப அட்டை நகல், புகைப்படம் மற்றும் மானியத்தின் ஒரு பகுதியைப் பெற வங்கிக் கணக்கு புத்தக முன்பக்க நகல் ஆகியவற்றுடன் தங்களது பெயர்களை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai