Enable Javscript for better performance
வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை, ரொக்கம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் கதவை உடைத்து 3 பவுன் நகை, ரொக்கம் திருட்டு

    By அரியலூர்  |   Published on : 22nd June 2015 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த நாகமங்கலம் கிராமம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் மனைவி சித்ரா (30). இவர், தனது 2 குழந்தைகள் மற்றும் மாமியார் கருப்பாயியுடன் சனிக்கிழமை இரவு வீட்டின் முன்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில், சித்ரா ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கம் ரூ.2 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.இதுகுறித்து, சித்ரா அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai