Enable Javscript for better performance
அரியலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ. 3.02 கோடியில் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ரூ. 3.02 கோடியில் நலத் திட்ட உதவிகள்

    By dn  |   Published on : 23rd June 2015 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் ரூ. 3.02 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை சார்பில், அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை வட்டங்களைச் சேர்ந்த 175 பயனாளிகளுக்கு ரூ. 17.50 லட்சத்தில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் வழங்கினார். கூட்டுறவுத் துறை சார்பில், 217 பயனாளிகளுக்கு ரூ. 54.22 லட்சம் பயிர்க் கடனுதவிக்கான காசோலைகளையும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், 47 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 75.06 லட்சம் கடனுதவி காசோலைகளையும், மாவட்ட மறுவாழ்வுத் துறை சார்பில், 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 14.98 லட்சம் திருமண நிதியுதவி மற்றும் 136 கிராம் தாலிக்கு தங்கம் ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.

    மேலும், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 3.90 லட்சம் மானியம், மொத்தம் ரூ. 13.02 லட்சம் மதிப்பிலான கடனுதவியுடன் கூடிய வாகனங்களுக்கான சாவியை வழங்கிய ஆட்சியர், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் பாரதிராஜா, ஜெயஸ்ரீ, காவியா, வினோதாதேவி, நிவேதா, சந்தோஷினி ஆகியோருக்கு கேடயங்களை வழங்கிப் பாராட்டினார்.

    பிறகு, மாவட்ட தொழில் மையம் சார்பில், ஒரு இளைஞருக்கு ரூ. 29 லட்சம் கடனுதவியை நீட்ஸ் திட்டத்தின் கீழ் ஆட்சியர் வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், 19 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 18.59 லட்சம் கடனுதவிக்கான காசோலைகளையும், கோவிந்தபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக 10 பேருக்கு வருவாய்த் துறை சான்றிதழ்களும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், 50 மாற்றுத்திறனாளி சுய உதவிக் குழுக்களுக்கு நேரடிக் கடனுதவி ரூ. 77.10 லட்சம், 12 பயனாளிகளுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பில் செல்போன் பழுது நீக்கும் பயிற்சிக்கான சான்றிதழ்கள், 25 பயனாளிகளுக்கு கணினிவழி கணக்கு பராமரிப்பு பயிற்சிக்கான சான்றிதழ்கள் என மொத்தம் 87 பயனாளிகளுக்கு ரூ. 79.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தின் சார்பில், 2 பள்ளிகளுக்கு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள தலா ரூ. 25 ஆயிரம் காசோலைகள் என மொத்தம் 596 பயனாளிகளுக்கு ரூ. 3.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், தனித் துணை ஆட்சியர் (சிறப்பு செயலாக்கம்) தமிழ்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai