Enable Javscript for better performance
அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் துளசிமாதவராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறமையான பயிற்சியாளர்களைக் கொண்டு எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் போது மதிய உணவு, தேநீர் மற்றும் பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

    பயிற்சி பெறுபவர்களுக்கான வயதுவரம்பு 18 முதல் 45 வரை. குறைந்தபட்ச கல்வித் தகுதி 7 ஆம் வகுப்பு, பயிற்சி ஜூன் 25 ஆம் தேதி தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஜயங்கொண்டம் சாலை, உழவர் சந்தை எதிரில், அரியலூர் என்ற முகவரியிலும், 99941 00981,04329-222173 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai