Enable Javscript for better performance
செம்மண் கடத்திய 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே செம்மண் கடத்திய 2 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் ஞாயிற்றுக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, த.பொட்டக்கொல்லை கிராமத்திலிருந்து வந்த 2 டிராக்டர்களை சோதனை செய்தார். அதில் அனுமதியின்றி செம்மண் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, டிராக்டரை ஓட்டிவந்த அதே கிராமத்தைச் சேர்ந்த விசு (31),  அருள் (26) ஆகியோரை கைது செய்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் முன் ஆஜர்படுத்தினார்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai