Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்தை தொடங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By dn  |   Published on : 23rd June 2015 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் நிலக்கரி மின் திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தி, தமிழர் நீதிக் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மின்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் அல்லது கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனடியாக விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

    நிலக்கரி மின் திட்டத்தால் நிலமிழக்கும் அனைவரையும் நிறுவனத்தின் பங்குதாரர்களாக்க வேண்டும், திட்டத்துக்கு நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குடும்ப வாரிசுகளுக்கு அவரவர் தகுதிக்கேற்ப வேலை வழங்க வேண்டும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும். இத்திட்டம் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் சுபா. இளவரசன் தலைமை வகித்தார். கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், பூ. ராமலிங்கம், அரங்கநாடன், பன்னீர்செல்வம், மாநில மகளிர் அணித் தலைவர் இள. கவியரசி உள்ளிட்டோர் பேசினர்.

    முன்னதாக மாவட்ட தொழிற்சங்கத் தலைவர் முருகன் வரவேற்றார். ஜயங்கொண்டம் நகரச் செயலாளர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai