Enable Javscript for better performance
அலு​வ​லக உத​வி​யா​ளர்,​​ ​ இர​வு காவ​லர் பணிக்கு விண்​ணப்​பிக்​க​லாம்- Dinamani

சுடச்சுட

    

    அலு​வ​லக உத​வி​யா​ளர்,​​ ​ இர​வு காவ​லர் பணிக்கு விண்​ணப்​பிக்​க​லாம்

    By dn  |   Published on : 24th June 2015 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரி​ய​லூர் மாவட்ட ஊரக வளர்ச்​சித் துறை​யில் அலு​வ​லக உத​வி​யா​ளர்,​​ மற்​றும் இர​வுக் காவ​லர் பணிக்கு விண்​ணப்​பிக்​க​லாம்.​

    இது​கு​றித்து மாவட்ட ஆட்​சி​யர் எ.​ சர​வ​ண​வேல்​ராஜ் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்பு:​

    அரி​ய​லூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்​றும் ஊராட்சி அல​கில் அரசு தலைப்பு மற்​றும் ஒன்​றி​யத் தலைப்​பில் காலி​யாக உள்ள அலு​வ​லக உத​வி​யா​ளர் மற்​றும் இர​வுக் காவ​லர் பணி​யி​டங்​கள் இன சுழற்சி அடிப்​ப​டை​யில் நிரப்​பப்​பட உள்​ளன.​ அரி​ய​லூர் அலு​வ​லக உத​வி​யா​ளர் பணி​யி​டம் -​1 ஆதி​தி​ரா​வி​டர் ​(முன்​னு​ரி​மை​யற்​ற​வர்)​ செந்​துறை ஊராட்சி ஒன்​றி​யம்,​​ அலு​வ​லக உத​வி​யா​ளர் பணி​யி​டம் -​ 1 ​(மிக​வும் பிற்​ப​டுத்​தப்​பட்​ட​வர்,​​ ஆத​ர​வற்ற விதவை)​ முன்​னு​ரி​மை​யுள்​ள​வர்.​ஜயங்​கொண்​டம் ஊராட்சி ஒன்​றி​யம்,​​ இர​வுக் காவ​லர் பணி​யி​டம் -​ 1 ​(பொது முன்​னு​ரி​மை​யற்​ற​வர்)​

    அலு​வ​லக உத​வி​யா​ளர் பணிக்கு விண்​ணப்​ப​தா​ரர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்​றி​ருக்க வேண்​டும்,​​ 1.7.2014-ல் 18 வயது பூர்த்தி அடைந்​த​வ​ரா​க​வும்,​​ 35 வய​துக்கு மிகா​ம​லும் இருக்க வேண்​டும்.​இர​வுக் காவ​லர் பணிக்கு ஆண்​கள் மட்​டுமே விண்​ணப்​பிக்க வேண்​டும்,​​ விண்​ணப்​ப​தா​ரர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்​றி​ருக்க வேண்​டும்,​​ கல்​வித் தகுதி சான்று,​​ ஜாதிச் சான்று,​​ நன்​ன​டத்தை சான்று அந்​தந்த ஊராட்சி ஒன்​றி​யங்​க​ளில் வசிப்​ப​தற்​கான சான்று நகல்​க​ளு​டன்,​​ மாவட்ட ஆட்​சி​யர் ​(வளர்ச்சி)​அலு​வ​ல​கம்,​​ அரி​ய​லூர் என்ற முக​வ​ரிக்கு வியா​ழக்​கி​ழமை ​(ஜூன் 25) மாலைக்​குள் கிடைக்​கு​மாறு விண்​ணப்​பங்​களை அனுப்​பி​வைக்க வேண்​டும்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai