கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
By dn | Published on : 24th June 2015 04:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டடத்தை இடிக்க உத்தரவிட்ட அந்த மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியரை கண்டித்தும்,
இடிக்க உத்தரவிட்டவர்களை தங்களது சொந்த செல்வில் மீண்டும் கட்டடத்தை கட்டித் தர வலியுறுத்தியும் ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வா அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார். உடையார்பாளையம் வட்ட தலைவர் எ.கே. செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார். மாவட்ட துணைச் செயலர் பச்சைமுத்து கண்டித்து பேசினார்.