Enable Javscript for better performance
மணப்​பத்​தூர் பள்​ளிக்கு விருது: ஆட்​சி​யர் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    அரி​ய​லூர் மாவட்​டத்​தில் காம​ரா​ஜர் விருது பெற்ற மணப்​பத்​தூர் ஊராட்சி பள்ளி தலைமை ஆசி​ரி​ய​ருக்கு ஆட்​சி​யர் எ.​ சர​வ​ண​வேல்​ராஜ் விருது வழங்​கிப் பாராட்​டி​னார்.​

    தமி​ழக முன்​னாள் முதல்​வர் காம​ரா​ஜ​ரின் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்​டா​டப்​பட்டு வரு​கி​றது.​ இதைத்​தொ​டர்ந்து,​​ அரி​ய​லூர் மாவட்​டத்​தில் ​ ஒவ்​வொரு ஆண்​டும்,​​ ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப்​பள்ளி மற்​றும் நடு​நி​லைப்​பள்​ளி​க​ளில் இருந்து சிறந்த பள்​ளி​கள் தேர்வு செய்​யப்​பட்டு பரி​ச​ளிப்​புத் திட்​டத்​தின்​கீழ் காசோலை மற்​றும் காம​ரா​ஜர் விருது வழங்​கப்​பட்டு வரு​கி​றது.​

    கடந்த 2014ஆம் ஆண்​டில் அரி​ய​லூர் மாவட்​டத்​தில் காம​ரா​ஜர் விரு​துக்கு செந்​துறை ஒன்​றி​யம்,​​ மணப்​பத்​தூர் ஊராட்சி ஒன்​றிய தொடக்​கப்​பள்ளி தேர்வு செய்​யப்​பட்​டது.​ தேர்வு செய்​யப்​பட்ட அப்​பள்​ளி​யின் தலைமை ஆசி​ரி​யர் சிவ​மூர்த்​தி​யி​டம் மாவட்ட ஆட்​சி​யர் எ.​ சர​வ​ண​வேல்​ராஜ் விரு​தினை வழங்கி பாராட்​டி​னார்.​ பின்​னர் அப்​பள்​ளி​யின் உள்​கட்​ட​மைப்பு வச​தியை மேம்​ப​டுத்​தும் வச​தியை மேம்​ப​டுத்​து​வ​தற்​காக ரூ.​ 25 ஆயி​ரத்​துக்​கான காசோ​லை​யை​யும் அவ​ரி​டம் திங்​கள்​கி​ழமை வழங்​கி​னார்.​

    நிகழ்ச்​சி​யில்,​​ மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர் மாரி​முத்து,​​ மாவட்ட தொடக்​கக் கல்வி அலு​வ​ல​ரின் நேர்​முக உத​வி​யா​ளர் குமார்,​​ மாவட்ட தொடக்​கக் கல்வி அலு​வ​லக இள​நிலை உத​வி​யா​ளர் படை​காத்து,​​ மணப்​பத்​தூர் பெற்​றோர் ஆசி​ரி​யர் கழக தலை​வர் கோவிந்​த​சாமி,​​ புர​வ​லர் திட்ட ஒருங்​கி​ணைப்​பா​ளர் கலைச்​செல்வி,​​ பள்ளி தலைமை ஆசி​ரி​யர்​கள் பூமு​டை​யான்​கு​டி​காடு ராவ​ணன்,​​ தள​வாய் ஜெய​கு​மார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​ட​னர்.​

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai