Enable Javscript for better performance
அரியலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்

    By அரியலூர்,  |   Published on : 25th June 2015 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து இணைப்புச் சாலை கோரி, 7 மற்றும் 8 வது வார்டு பகுதி பொதுமக்கள் புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் பேருந்து நிலையம் முதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பங்களா வழியாக பெரியார் நகர், செந்துறை இணைப்புச் சாலையை செப்பனிட வேண்டும், 25 ஆண்டுகளாக போடப்படாமல் உள்ள இந்த சாலையை சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 7 மற்றும் 8 வது வார்டு பொதுமக்கள் அண்ணாசிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

    இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பூபதி தலைமை வகித்தார். தேமுதிக மாவட்டச் செயலாளர் இராம. ஜெயவேல், மனித உரிமை கவுன்சில் தலைவர் சங்கர், நகராட்சி உறுப்பினர் கோகுல் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினர்.

    பெரியார் நகர் - செந்துறை இணைப்புச் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும், சாலையின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும், இந்தச் சாலையில் புதைச் சாக்கடை பணியால் ஏற்பட்டுள்ள மேடு, பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai