Enable Javscript for better performance
அரியலூர் ரயில் நிலையம், அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் ரயில் நிலையம், அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

    By அரியலூர்,  |   Published on : 25th June 2015 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அரியலூர் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை கடிதம் ஒன்று வந்தது. கடிதத்தை ரயில் நிலைய அலுவலர் ராஜன் பிரித்தார்.

    அந்தக் கடிதத்தில், ஜூன் 30-ம் தேதி அரியலூர் ரயில் தடத்தில் மருதையாற்றுப் பாலத்தில் மலைக்கோட்டை ரயில் இரவில் வரும்போது, வெடிகுண்டு வெடிக்கும். இதில் மாற்றமில்லை. முடிந்தால் தடுத்துப் பாருங்கள். இப்படிக்கு தனபால், கலியபெருமாள், ராஜேந்திரன், தியாகராஜன், ஸ்ரீரங்கம், திருச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து ரயில்வே துறை அதிகாரிகள் மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும், இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே முகவரியில் இருந்து அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை வெளியேற்றி விட்டு போலீஸார் சோதனை நடத்தினர்.

    ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அரியலூர் ரயில் நிலையத்துக்கு ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் இதேபோல் ஸ்ரீரங்கம் முகவரியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. தற்போது மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai