Enable Javscript for better performance
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறைகேடு: கண்டித்து விவசாயிகள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறைகேடு: கண்டித்து விவசாயிகள் மறியல்

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 25th June 2015 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி, கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு ஜயங்கொண்டம் ஆண்டிமடம், தா. பழூர், மீன்சுருட்டி, உடையார்பாளையம் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருள்கள் எள், கடலை, முந்திரி போன்றவற்றை விற்பனை செய்ய வருகின்றனர்.

    இங்கு விவசாயிகளின் விளைபொருளுக்கு மற்ற ஊர்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை விட மிகவும் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கு விளைபொருள்களை வாங்கும் வியாபாரிகள் வேண்டுமென்றே விலையை குறைத்து மதிப்பிடுகின்றனர்.

    இவர்களைத் தவிர மற்ற வியாபாரிகளை அனுமதிப்பதில்லை. மேலும் பொருள்களை எடைபோடும்போது மூட்டை ஒன்றுக்கு அரை கிலோ அதிகமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது எனக் கூறி, விவசாயிகள் ஜயங்கொண்டம் - திருச்சி சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் பொய்யாமொழி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேலாளர் தங்கதுரை ஆகியோர், விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai