Enable Javscript for better performance
\\\"சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க திமுகவினர் தயாராக வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க திமுகவினர் தயாராக வேண்டும்'

    By அரியலூர்  |   Published on : 25th June 2015 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுகவினர் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ். சிவசங்கர்.

    அரியலூர் மாவட்டம், செந்துறையில் ஒன்றிய திமுக செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:

    தமிழ்நாட் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலுக்கு திமுகவினர் இப்போதே தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு திமுக தலைவர் கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க பாடுபட வேண்டும் என்றார் சிவசங்கர்.

    கூட்டத்தில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சிவ. பாஸ்கர் வரவேற்றார். ஒன்றிய அவைத் தலைவர் சிவப்பிரகாசம், ஒன்றியத் துணைச் செயலர் எழிலமாறன், தலைமைக் கழகப் பேச்சாளர் சேலம் சுஜாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். ஊராட்சி கழகச் செயலர் காளமேகம் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai