Enable Javscript for better performance
மாணவியிடம் வல்லுறவு:இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே பள்ளி மாணவியை வல்லுறவு செய்த இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    வங்காம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிவண்ணன்(19).10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, ஆனைவாரி ஓடை அருகே அந்த மாணவியை மணிவண்ணன் வல்லுறவு செய்ததாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மணிவண்ணனின் தந்தை மாரிமுத்துவிடம் கேட்டதற்கு, மாரிமுத்துவும், அவரது உறவினர் சுப்பிரமணியனும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.இதுகுறித்து அந்த மாணிவியின் தாய் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் ஷர்மிளா வழக்குப் பதிந்து மணிவண்ணனை கைது செய்தார். மேலும், மாரிமுத்து, சுப்பிரமணியனை போலீஸார் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai