Enable Javscript for better performance
திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

    By அரியலூர்,  |   Published on : 26th June 2015 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூரில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    திமுக தலைவர் கருணாநிதியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மரக்கன்றுகள் நடுதல், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்குதல் என்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், வாலாஜாநகரத்தில் கடந்த 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் வென்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா வாலாஜாநகரம் ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலரும், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ். சிவசங்கர் தலைமை வகித்து வெற்றி அணிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது:

    திமுக தலைவர் கருணாநிதி, மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் தங்களது பிறந்த நாளை சமூகத்துக்கு பயன்படும் விதத்தில் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் திமுகவினர் இன்று இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுதுப்பொருட்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர் என்றார்.

    முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ.இளையராஜா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணித் துணைச் செயலர் சுபா. சந்திரசேகரன், மாவட்டத் துணைச் செயலர் வழக்குரைஞர் சாந்தி, ஒன்றியச் செயலர் ஜோதிவேல், நகரச் செயலர் முருகேசன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்கை.எழில்மாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai