Enable Javscript for better performance
நிகழாண்டு ரூ. 44.76 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கு பல்வேறு துறைகளுக்கு ரூ. 44 கோடியே 76 லட்சத்து 7 ஆயிரம் வங்கிக் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர், அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

    மகளிர் திட்டம் சார்பாக 2015-16ஆம் ஆண்டுக்கு ரூ. 17 கோடி, கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பாக கோழிப்பண்ணை அமைத்திட ரூ. 51.06 லட்சம், புதுவாழ்வுத் திட்டம் சார்பாக ரூ. 26 கோடி, தாட்கோ மூலம் ரூ. 87.51 லட்சம், மாவட்ட தொழில் மையம் மூலம் சுய தொழில் வேலைவாய்ப்புக்காக ரூ. 37.50 லட்சம் என மொத்தம் ரூ. 44 கோடியே 76 லட்சத்து 7 ஆயிரம் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    மேலும் இந்த ஆண்டுக்கான வங்கிக்கடன் இலக்கை எய்திடவும், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் சுய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்திட தமிழக அரசின் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை விரைந்து வழங்குமாறு வங்கியாளர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் சாமுவேல்இன்பதுரை, முன்னோடி வங்கிகளின் மேலாளர் முரளிகிருஷ்ணன், தாட்கோ மாவட்ட மேலாளர் என். கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai