Enable Javscript for better performance
மானியத் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    மானியத் திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்

    By அரியலூர்  |   Published on : 26th June 2015 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு திட்டங்களில் மானிய பயன்களை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் (பொ) மனோகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள், உரங்கள், மண் மாதிரிகள், பண்ணை இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து மானிய திட்டங்களிலும் பயன் பெற ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஆதார் எண்ணை கணினி வழியாக அக்ரிஸ் நெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பதால், அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களுக்கு சென்று தங்கள் பதிவு எண்ணை பதிவு செய்து கொள்ளலாம். ஆதார் எண் ஜூன் 24 ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை பதிவு செய்யப்படும். எனவே அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை ஆதார் அடையாள அட்டைகளை எடுத்து வந்து, அரியலூர், செந்துறை, திருமானூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மற்றும் தா.பழூர் வட்டாரங்களில் உள்ள விரிவாக்க மையங்களில் வேளாண் உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு தங்கள் ஆதார் எண்ணை விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai